திருத்தணி நகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு

திருத்தணி: திருத்தணி நகராட்சி ஆணையராக இருந்த ராமஜெயம் கடந்த 30ம் தேதி ஓய்வுப்பெற்றார். இதையடுத்து கூடுதல்பொறுப்பாக திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சுரேந்தர் ஷா திருத்தணி நகராட்சி பணிகளை கவனித்து வந்தார். இந்நிலையில், திருத்தணி நகராட்சிக்கு புதியதாக மதுராந்தகத்தில் பணியாற்றிவந்த ஆணையர் அருள் நியமிக்கப்பட்டு அவர் நேற்றுமுன்தினம் நகராட்சி அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவருக்கு நகராட்சி மேலாளர் நாகரத்தினம், நகராட்சி அலுவலர்கள், நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் லட்சுமி நாராயணன், பொதுப்பணி மேற்பார்வையாளர் நாகராஜ் ரவி, ஜெகநாதன், ராஜேஷ்உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு முன்னதாக, திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், நகரமன்ற தலைவர் சரஸ்வதி பூபதி, துணைத் தலைவர் சாமிராஜ் ஆகியோரை சந்தித்து அருள் வாழ்த்து பெற்றார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் திருத்தணி பூபதி, திமுக நகர செயலாளர் வினோத்குமார் மற்றும் நகர்மன்ற கவுன்சிலர்கள் உள்பட பலர் வாழ்த்து கூறினர்.

Related posts

கோவையில் கட்டிட ஒப்பந்ததாரருக்கு கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.1.86 கோடி மோசடி செய்த 2 பேர் கைது

குமரி மாவட்டத்தில் 136 ரேஷன் கடைகளில் கருவிழி ஸ்கேன் கருவி

தூத்துக்குடி அருகே தட்டப்பாறையில் செம்மண், கருங்கல் கடத்திய 2 பேர் கைது