திருச்சி சுற்றுப்புற மாவட்டங்களில் நாளை ரமலான் பண்டிகை கொண்டாட்டம்

 

திருச்சி, ஏப். 10: திருச்சி மற்றும் சுற்றுப்புற மாவட்டப்பகுதிகளில் ஷவ்வால் பிறை தென்படாத காரணத்தால் நாளை ரமலான் பண்டிகை கொண்டாப்படும் என ஹிலால் கமிட்டித் தலைவரும் மாவட்ட அரசு ஹாஜி ஜலீல்சுல்தான் தெரிவித்துள்ளார். திருச்சியில் ஷ்வ்வால் பிறை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஹிலால் கமிட்டித் தலைவரும். மாவட்ட அரசு ஹாஜியுமான ஜலீல் சுல்தான் தலைமை வகித்தார்.

ஹிலால் கமிட்டி உறுப்பினர்கள் முகமது ரூஹில்ஹக், நௌஷாத் என்கிற பஷிர்பாய், உசேன், ஷேக்தாவூத் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இதனையடுத்து நேற்று மாலை ஷவ்வால் பிறை தென்படாத காரணத்தால், திருச்சி மற்றும் திருச்சி சுற்றுப்புற மாவட்டப் பகுதிகளில் ஏப்ரல் 11ம் தேதி, வியாழக்கிழமை முதல்பிறை ஆரம்பமாகும் எனவே அன்றைய தினம் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது என மாவட்ட அரசு ஹாஜி தெரிவித்துள்ளார்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு