திருச்சி கோளரங்கத்தில் கணித திறனறி தேர்வு: டிச.3ம்தேதி நடக்கிறது

 

திருச்சி, நவ.10: அண்ணா அறிவியல் மையம் கோளரங்கத்தில் மாணவ சமுதாயம் பயன்பெற தொடர்ந்து அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதில் கணித திறனறி தேர்வை பள்ளி மாணவா்களுக்கு வரும் டிச.3ம் தேதி காலை 11 மணிக்கு கோளரங்க வளாகத்தில் நடத்தபட உள்ளது. இதில் 5,6,7 மற்றும் 8ம் வகுப்பு பயிலும் அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.

நுழைவு கட்டணமாக ₹100 செலுத்த வேண்டும், டிச.1 ம் தேதிக்குள் பதிவு செய்யவும், வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும், ேமலும் விவரங்களுக்கு 0431-2332190,2331921 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திட்ட இயக்குநர்(பொ) அகிலன் தெரிவித்துள்ளார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்