திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு பைக், ஆட்டோ மீது கார் மோதல்: 4 பேர் படுகாயம்

கிருஷ்ணராயபுரம்,ஜன.21: ஆட்டோ, பைக் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர். கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகம் அருகே திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில், வேகமாக ஒரு கார் வந்தது. திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அப்பிப்பாளையத்தை சேர்ந்த சின்னத்துரை (49) என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார். கார் எதிர்பாராதமாக முன்பக்க டயர் வெடித்தது. இதில் சின்னத்துரை கட்டுப்பாட்டை இழந்துள்ளார். அபோது எதிரே கிருஷ்ணராயபுரம் அரசவள்ளி தெருவை சேர்ந்த மதி (29) என்பவர் ஓட்டி வந்த பயணிகள் ஆட்டோ மீது வேகமாக மோதியது, அதனை தொடர்ந்து கார், கரூர் மாவட்டம், ஆட்டாம்பரப்பு சேர்ந்த வேலுச்சாமி (58) என்பவர் ஓட்டிவந்த பைக் மீதும் மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த மேட்டு திருக்காம்புலியூர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமாரி (36) என்பவர் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை நடைபெற்றது. இதுகுறித்து மாயனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related posts

2 நாள் அதிரடி வேட்டையில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 21 வாலிபர்கள் பிடிபட்டனர்

கலைஞர் பிறந்த நாளையொட்டி நடந்த ஆணழகன் போட்டியில் வென்றவருக்கு பரிசு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 22 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது