திருச்சி அருகே வீட்டில் புகுந்த சாரை பாம்பு

 

திருச்சி, பிப்.4: திருச்சியில் வீட்டுக்குள் புகுந்த 7 அடி நீள பாம்பை தீயணைப்புத் துறையினர் அரை மணி நேரம் போராடி மீட்டனர். திருச்சி விமான நிலையம் காமராஜ்நகர் அந்தோணியார் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் நேற்று காலை வீட்டில் சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அறையில் மேஜை மீது இருந்த பொருட்கள் திடீரென தவறி விழுந்தன. சத்தம்கேட்டு ஹாலுக்கு வந்து பார்த்தபோது, மேஜை மீது சுமார் 7 அடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று நெளிந்து கொண்டு இருந்தது.

உடனே அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்த ராஜேஸ்வரி, கதவை சாத்தினார். சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் வந்து வீட்டுக்குள் பாம்பை தேடியபோது எங்கோ பதுங்கிக் கொண்டது. பின்னர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இதனைஅடுத்து விரைந்து வந்த திருச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் சத்தியவர்த்தன் தலைமையிலான வீரர்கள், சுமார் அரை மணி நேரம் போராடி வீட்டுக்குள் இருந்த பாம்பை மீட்டனர். பின்னர் பிடிபட்ட சாரைப்பாம்பை பாதுகாப்பாக வனப்பகுதியில் விடப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் இதே போன்றதொரு பாம்பு வனத்துறையால் பிடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்