திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு பக்தர்கள் காத்திருந்து தரிசனம்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில், சௌமிய நாராயண பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் 108 வைணவ தளங்களில் சிறப்பு வாய்ந்தது. இக்கோயிலில் புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று காலை உற்சவ பெருமாளுக்கும், தேவி, பூமாதேவியருக்கும் பால், சந்தனம், மஞ்சள், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதனையடுத்து, பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியாருடன் சிறப்பு அலங்காரத்தில் திருநாள் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Related posts

காட்பாடியில் மாயமான வடமாநில சிறுமி ஒடிசாவில் மீட்பு தனிப்படை போலீசார் நடவடிக்கை

(வேலூர்) திருமண மண்டபத்தின் உரிமையாளருக்கு அபராதம் பேரூராட்சி நிர்வாகம் அதிரடி பாலாற்றில் குப்பை கொட்டிய

1225 டன் யூரியா மணலியில் இருந்து காட்பாடிக்கு வருகை லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைப்பு வேலூர் உட்பட 4 மாவட்டங்களுக்கு