திருக்கோஷ்டியூரில் கஞ்சி கலயம் சுமந்து பெண்கள் ஊர்வலம்

திருப்புத்தூர், ஆக.15: திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் வடக்குவாசல் செல்லியம்மன் கோயிலில் நேற்று ஆடி கஞ்சி களைய திருவிழா நடைபெற்றது. திருக்கோஷ்டியூரில் கஞ்சி கலய திருவிழாவை முன்னிட்டு ஆடி முதல் நாளில் பெண்கள் காப்பு கட்டி விரதம் கடைபிடித்து வந்தனர். இந்த கஞ்சி கலய விழாவை திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் திருக்கோயில் கண்காணிப்பாளர் சேவற்கொடியோன் துவக்கி வைத்தார்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தும் வகையில் நடைபெற்ற கஞ்சி கலய விழா ஊர்வலம் நாகபாச தெரு, ஓம் சக்தி மன்றத்திலிருந்து 201 பெண்கள் கஞ்சி கலயங்களை தலையில் சுமந்து கீழத்தெரு, சன்னதி தெரு, தேவர் சிலை, முத்தையா கோயில், மேலரது வீதி வழியாக வடக்கு வாசல் செல்லியம்மன் கோயில் வந்தடைந்தனர்.

பக்தர்கள் சுமந்து வந்த கஞ்சி கலயங்களை கோயில் வளாகத்தில் அம்மனுக்கு முன்பு வேப்பிலை பரப்பப்பட்டு அதன் மேல் அடுக்கி வைக்கப்பட்டு அம்மனுக்கு படைக்கப்பட்டது. பின்பு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. இவ்விழாவில் திருக்கோஷ்டியூர், வைரவன்பட்டி, சுள்ளங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்