திரிசூலம் பகுதியில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த திரிசூலம் பகுதியில் ஒரு கோயில் வளாகத்தில் 5 பேர், நேற்று கஞ்சாவை பங்கு பிரித்துக் கொண்டிருந்தனர். அந்த வழியாக ரோந்து போலீசார் வந்தபோது, அவர்களை பார்த்து 5 பேரும் தப்பியோட முயன்றனர். அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் கஞ்சா இருந்ததால், பல்லாவரம் காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில் அவர்கள், திரிசூலம், வைத்தியர் தெருவை சேர்ந்த ராஜா (38), பழைய பல்லாவரம், யூனியன் கார்பைடு காலனி பகுதியை சேர்ந்த திவாகர் (32), கோகுல் (21), பல்லாவரம், சாவடி தெருவை சேர்ந்த ஆகாஷ் (எ) ஊளை (22), ஜமீன் பல்லாவரம், மளகாநந்தாபுரம் பகுதியை சேர்ந்த ஹாசன் (எ) குள்ளா (21) என்பதும், இவர்கள் பல்லாவரம் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும்  தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் இருந்து 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் 5 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்….

Related posts

57 பவுன் நகை கொள்ளையடித்த சிறை ஏட்டு உட்பட 6 பேர் கைது

கோவையில் சினிமாவை மிஞ்சும் சம்பவம் தொழிலதிபரிடம் ஹவாலா பணமா? காரை மறித்து கொள்ளை முயற்சி: ஆயுதங்களுடன் தாக்கிய ராணுவ வீரர் உட்பட 4 பேரிடம் விசாரணை

விருதுநகர் லாட்ஜில் தங்கி உல்லாசம் பாலியல் தொழிலில் ஈடுபடும்படி நிர்பந்தித்த காதலன் கொலை: தப்பி ஓடிய காதலி கைது