திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம்

திருச்செங்கோடு, செப்.15: திருச்செங்கோடு நகர, ஒன்றிய திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில், மதுரா செந்தில் பங்கேற்று பேசினார். திருச்செங்கோடு நகரத்திற்குட்பட்ட திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், நகர திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. நகர செயலாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் முன்னிலை வகித்து பேசுகையில், ‘வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் தங்களது பணியை செவ்வனே செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

திருச்செங்கோடு தொகுதி பொறுப்பாளர் சந்திரகுமார் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் மயில்சாமி, மொழிப்போர் தியாகி பரமானந்தம், தலைமைக் கழக பேச்சாளர் முரசொலிமுத்து, மாநில மகளிர் சமூக வலைதள பொறுப்பாளர் ரியா, நகர்மன்ற உறுப்பினர்கள், நகர திமுக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு

ராஜபாளையத்தில் பலத்த காற்று மரம் சாய்ந்து வாகனங்கள் சேதம்

சட்ட விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்