திமுக மாவட்ட பிரதிநிதி குடும்பத்திற்கு மருத்துவ சிகிச்சைக்காக ₹20 ஆயிரம் நிதி உதவி

சுரண்டை, மார்ச் 13:திமுக மாவட்ட பிரதிநிதி குடும்பத்திற்கு மருத்துவ சிகிச்சைக்காக தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் நிதி உதவி வழங்கினார். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுந்தரபாண்டிபுரம் பேரூர் மாவட்ட பிரதிநிதி இசக்கிமுத்துவின் மனைவி சிகிச்சை பெற்று வருகின்றார். இதையறிந்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், சென்னை சென்று உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். டாக்டரிடம் குடும்ப சூழ்நிலை குறித்து விளக்கி சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க வலியுறுத்தினார். மாவட்ட பிரதிநிதி குடும்பத்திற்கு ₹20 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். மேலும் உதவி தேவைப்பட்டால் அழைக்கும்படி கூறினார். அப்போது வீராணம் ஒன்றியக்குழு உறுப்பினர் சேக் முகம்மது, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், கடையம் முன்னாள் ஒன்றிய செயலாளர் குமார், தென்காசி துணை சேர்மன் கனகராஜ் முத்துப்பாண்டியன், கீழப்பாவூர் கவுன்சிலர் பொன்செல்வன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரஹீம், மாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை