திமுக செயற்குழு கூட்டம்

 

சிவகங்கை, பிப்.9: திருப்புவனத்தில் மேற்கு ஒன்றிய, பேரூர் திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அவைத் தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் வசந்தி சேங்கைமாறன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். மார்ச் 1ல் முதலமைச்சர் முக.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஒன்றிய, நகர பகுதிகளில் கொடியேற்றி, நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாடுவது.

மதுரையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழுவினரிடம் திருப்புவணத்தில் பஸ் நிலையம் அமைப்பது, மதுரை முதல் மானாமதுரை வரை மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்துவது. திருப்புவனத்திற்கு அரசு கலைக் கல்லூரி தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனு அளிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிப்பது. நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பாக முகவர்கள், கிளைச் செயலாளர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நகர செயலாளர் நாகூர்கனி, பேரூராட்சி துணைத் தலைவர் ரகமத்துல்லாகான், ஒன்றிய நிர்வாகிகள் ஈஸ்வரன், வெங்கடேசன், அக்கினிராஜ், ரவி, சக்திமுருகன், ராமு, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கண்ணன், வேல்பாண்டி, ராமலட்சுமி பாலகிருஷ்ணன், மகளிரணி சித்ரா மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Related posts

காட்பாடியில் மாயமான வடமாநில சிறுமி ஒடிசாவில் மீட்பு தனிப்படை போலீசார் நடவடிக்கை

(வேலூர்) திருமண மண்டபத்தின் உரிமையாளருக்கு அபராதம் பேரூராட்சி நிர்வாகம் அதிரடி பாலாற்றில் குப்பை கொட்டிய

1225 டன் யூரியா மணலியில் இருந்து காட்பாடிக்கு வருகை லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைப்பு வேலூர் உட்பட 4 மாவட்டங்களுக்கு