திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி அமைச்சர் கயல்விழி செல்வராஜ் துவக்கி வைத்தார்

 

தாராபுரம், ஜன.31: திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக மற்றும் இளைஞர் அணி சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி அண்ணா சிலை அருகே நடைபெற்றது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று துவக்கி வைத்தார். திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவருமான இல.பத்மநாபன், தாராபுரம் நகர கழக செயலாளர் முருகானந்தம், ஒன்றிய கழக செயலாளர் செந்தில்குமார், நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்து மத நல்லிணக்க உறுதிமொழி வாசகங்களை முன் மொழிந்து படிக்க அனைவரும் வழிமொழிந்து உறுதிமொழி ஏற்றனர்.

மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியின் முன்னதாக பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் உருவ சிலைக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவர் இல.பத்மநாபன், இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட தலைவர் வக்கீல் தென்னரசு, கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் கனகராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் செந்தில்குமார், தாராபுரம் வாக்குச்சாவடி முகவர்கள் ஒருங்கிணைப்பாளர் ராமசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில், நகர, ஒன்றிய மற்றும் கூட்டணி கட்சி சார்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.

Related posts

மாநகர பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் தினசரி 16 லட்சம் டிக்கெட் விநியோகம்: மேலாண் இயக்குநர் தகவல்

புழல் சைக்கிள் ஷாப் பகுதியில் மாஞ்சா நூல் கழுத்தறுத்து இன்ஜினியர் படுகாயம் : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

புழல் டீச்சர்ஸ் காலனியில் நாய் கடித்து சிறுவன் படுகாயம்