திமுக ஒன்றிய குழு உறுப்பினர் கணவருடன் திடீர் போராட்டம்

நாமக்கல், ஜன.14: நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியம் அவினாசிபட்டியைச் சேர்ந்தவர் முருகேசன், இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர் மல்லசமுத்திரம் ஒன்றிய குழுவில் 1வது வார்டு திமுக கவுன்சிலர் ஆவார். முருகேசன், அவரது நண்பர் சுரேஷ் ஆகிய இருவரும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் டெண்டர் எடுத்து, டேங்கர் லாரிகளை, தனியார் நிதி நிறுவனம் மூலம் வாங்கி, கூட்டாக தொழில் செய்து வந்துள்ளனர்.

இதில் இருவருக்கும் இடையே, சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தகராறு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று மாலை முருகேசனும், அவரது மனைவி தமிழ்ச்செல்வியும், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின்னர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை