திமுகவில் இணைந்த பாஜ நிர்வாகிகள்

சிவகங்கை, ஏப். 7: சிவகங்கை பாஜ பட்டியலின அணி மாவட்ட துணைத் தலைவர் சோணைமுத்து, சிவகங்கை நகர் 25வது வார்டு பாஜ தலைவர் சக்திவேல், பாஜ ஒன்றிய பொறுப்பாளர் பசுபதி மற்றும் 10க்கும் மேற்பட்ட பாஜ நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி சிவகங்கை திமுக நகர் செயலாளர், நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் தலைமையில் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் சிவகங்கை நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், கீதாகார்த்திகேயன், வட்ட செயலாளர் கணேசன், சேது, கிருஷ்ணன்ஞானம், அருண் மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு