திண்டுக்கல் அருகே ஆசிரியையிடம் செயின் பறிப்பு

திண்டுக்கல், மார்ச் 21: திண்டுக்கல் அருகே என்.ஜி.ஓ காலனி முல்லை தெருவை சேர்ந்தவர் கார்த்தீஸ்வரன்.இவரது மனைவி பிரியா (30).இவர் தனியார் பள்ளி ஆசிரியை.இவர் நேற்று முன்தினம் பள்ளி முடிந்து டூவீலரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது என்.ஜி.ஓ. காலனி ஓடையூர் அருகே சென்ற போது பிரியாவை பின் தொடர்ந்து டூவீலரில் வந்த 2 மர்ம நபர்கள் பிரியா அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.இது குறித்து பிரியா திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.அதன் பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், எஸ்ஐ பாலசுப்ரமணியன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Related posts

காட்பாடியில் 3 மாதங்களாக சிறுமியை மிரட்டி சிறுவன் சில்மிஷம் போக்சோ வழக்குப்பதிவு

காட்பாடியில் துணிகரம் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 8 சவரன் திருட்டு

அதிமுக தொண்டர்கள் அனைவரும் விரைவில் ஒன்றிணைந்து வருவார்கள் வேலூரில் டிவிவி தினகரன் பேட்டி