காடுகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

நத்தம், மார்ச் 21: நத்தம் அருகே மூங்கில்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சர்வதேச காடுகள் தினம் மார்ச் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்ட மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதைத்தொடர்ந்து காடுகளின் முக்கியத்துவம் அவற்றை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வன பாதுகாப்பு குறித்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வேளாண் பணி அனுபவ திட்ட மாணவர்கள் அபினேஷ், அபிஷேக், ஆதித்யா, பாலமுருகன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர். முன்னதாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்