தவறி விழுந்த தொழிலாளி சாவு

தேனி, மே 5: தேனி மாவட்டம், கோடாங்கிபட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் ஞானகுரு மகன் ராஜதுரை(33) கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். இவர் குடிக்கு அடிமையானவர். தினமும் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவதன்று குடிபோதையில் நடந்து சென்றவர், தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பின்பக்கத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தேனி அரசினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த ராஜதுரை நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிகின்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்