தமிழில் பதவிப்பிரமாணம் செய்ததில் தவறு கேரள எம்எல்ஏவுக்கு ரூ.2,500 அபராதம்

திருவனந்தபுரம்: கேரளாவில் சமீபத்தில் புதிய எம்எல்ஏக்கள் பதவி ஏற்றனர். தேவிகுளம் தொகுதி மார்க்சிஸ்ட் எம்எல்ஏ ராஜா தமிழில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.சட்டப்படி எம்எல்ஏ பதவி ஏற்கும்போது, கடவுளின் பெயரால், உளமாற, இதயபூர்வமாக என்ற வார்த்தைகளில் ஒன்றை கண்டிப்பாக கூற வேண்டும். இதில் எதையும் எம்எல்ஏ ராஜா பயன்படுத்தாததால், கடந்த 2ம் தேதி காலை சபாநாயகர் ராஜேஷ் முன்னிலையில், மீண்டும் எம்எல்ஏவாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.இதற்கிடையே பதவிப்பிரமாணம் செய்யாமல் ராஜா சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சதீசன் கோரிக்கை விடுத்திருந்தார். முறையான பதவிப்பிரமாணம் செய்யாமல் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டால், ஒரு நாளைக்கு ரூ.500 அபராதம் விதிக்க வாய்ப்பு உண்டு என்று கூறப்பட்டது. இந்த நிலையில், உரிய முறையில் பதவிப்பிரமாணம் செய்யாமல் ராஜா 5 நாள் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டதால், அவருக்கு ரூ.2,500 அபராதம் விதிக்கப்படுவதாக, சபாநாயகர் ராஜேஷ் நேற்று சட்டசபையில் அறிவித்தார். …

Related posts

முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் ஜாமினை ரத்து செய்யக் கோரி மனு..!!

ஜாமினை நீட்டிக்கக் கோரிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை தள்ளிபடி செய்தது உச்சநீதிமன்றம்

ஜாமினை நீட்டிக்கக் கோரிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!!