தமாகா இளைஞரணி சார்பில் போதை பொருள் ஒழிப்பு கையெழுத்து இயக்கம்

ஈரோடு,மே27: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி சார்பில் போதை பொருள் ஒழிப்பு கையெழுத்து இயக்கம் நேற்று ஈரோட்டில் தொடங்கப்பட்டது. ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் தொடங்கிய இந்த கையெழுத்து இயக்கத்திற்கு இளைஞரணி மாநில தலைவர் யுவராஜா தலைமை தாங்கினார். கட்சியின் மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர், மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழகத்தில் போதை பொருட்களை ஒழிப்பது தொடர்பாக பெண்கள், இளைஞர்கள், தொழிலாளர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

பின்னர் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் அரசை வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் கட்சியின் இளைஞரணி சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இந்த இயக்கம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஈரோட்டில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். இதில் முதல்கட்டமாக வருகின்ற திங்கட்கிழமையன்று அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு கூறினார்.

Related posts

திருச்சி மத்திய சிறை நுழைவாயிலில் ரூ1.09 கோடி செலவில் பெட்ரோல் பங்க்: சிறைக்கைதிகள் நடத்த ஏற்பாடு

ஜங்ஷன் நுழைவாயிலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

ஸ்ரீரங்கம் காந்தி சாலையில் திடீர் பள்ளம் சீரமைப்பு பணி தீவிரம்: 2 நாள் போக்குவரத்து தடை