தனியார் பஸ் மோதி அமரர் ஊர்தி, ஆம்புலன்ஸ் சேதம்

 

பல்லடம், ஜூலை 5: பல்லடத்தில் தனியார் பஸ் மோதி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தனியார் அமரர் ஊர்தி மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நேற்று சேதம் அடைந்தது. பல்லடம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பல்லடம் அரசு மருத்துவமனை அருகில் சாலையோரமாக தனியார் அமரர் ஊர்தி மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் சேவை வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

கோவையிலிருந்து திருப்பூர் நோக்கி 50 பயணிகளுடன் வந்த தனியார் பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த தனியார் அமரர் ஊர்தி மற்றும் 2 தனியார் ஆம்புலன்ஸ்கள் மீது மோதியதில்சேதம் அடைந்தது. மேலும் இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர், இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்