தனியார் தங்க நகை சிறுசேமிப்பு திட்டத்தில் ₹20.35 லட்சம் மோசடி வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் ெசய்யாறு தலைமையிடமாக கொண்டு இயங்கிய

வேலூர், பிப்.8: செய்யாறு தலைமையிடமாகக்கொண்டு இயங்கி வந்த தனியார் தங்க நகை சிறுசேமிப்பு திட்டத்தில் ₹20.35 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. ேவலூர் எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் ஏடிஎஸ்பிக்கள் கோட்டீஸ்வரன், கவுதமன் ஆகியோர் தலைமையில் ேநற்று நடந்தது. இதில் காட்பாடி கொத்தமங்கலத்தை சேர்ந்த கம்பி கட்டும் தொழிலாளி கோவிந்தராஜ் என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனத்தில் தங்க நகை சிறுசேமிப்பு திட்டத்தில் கடந்த 2022ம் ஆண்டு சேர்ந்தேன். அந்த ஆண்டு நான் செலுத்திய தொகைக்குரிய நகையை கொடுத்தனர். அந்த நம்பிக்கையின்பேரில் கடந்த ஆண்டு மீண்டும் சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்ந்தேன்.

அப்போது பட்டாசு, இனிப்பு ஆகியவை வழங்கப்படும் என்றும், 15 பேரை சேர்த்தால் சிறப்பு பரிசும் வழங்கப்படும் என்று கூறினர். இதை நம்பிய நான், 277 வாடிக்ைகயாளர்களை சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்த்தேன். அவர்களிடம் இருந்து மாதந்தோறும் பணம் பெற்று அந்த நிறுவனத்தில் செலுத்தி வந்தேன். இதுவரை சுமார் ₹20.35 லட்சம் வசூலித்து செலுத்தியுள்ளேன். ஆனால் தீபாவளிக்கு முன்பாகவே அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தலைமறைவாகிவிட்டார். இதனால் பணம் கொடுத்தவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனவே பணத்தை திரும்ப மீட்டு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார்.

Related posts

மேம்பாலத்தில் உறுதிதன்மை பரிசோதனை

அரசு மாதிரி பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

பெரம்பலூர் மாவட்ட தாலுகாக்களில் பொதுவிநியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்