தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் விஜய் ரூபானி: குஜராத் மாநில அரசியலில் பரபரப்பு

காந்திநகர்: குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். குஜராத் ஆளுநர் ஆசார்யா தேவ்ராத்திடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார் விஜய் ரூபானி. பாஜகவை சேர்ந்த 65 வயதான விஜய் ரூபானி 2016 முதல் குஜராத் முதல்வராக இருந்து வந்தார். அடுத்த ஆண்டு இறுதியில் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் விஜய் ரூபானி ராஜினாமா செய்துள்ளார். மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் கொண்ட குஜராத் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்தார். கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், முதல்வராக பணியாற்ற வாய்ப்பளித்த பிரதமர் மோடிக்கு நன்றி. எனக்கு மிகப்பெரிய பொறுப்பு வழங்கிய பா.ஜ.,விற்கும், என்னை வழிநடத்திய நட்டாவுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். மக்களுக்கு சேவை செய்ய பா.ஜ., ஒரு அணியாக செயல்பட்டது. மாநிலத்தின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளேன். புதிய கொள்கைக்கு புதிய தலைமை தேவைப்படும். இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

பீகாரில் கொசாய்மட் என்ற இடத்தில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து

இந்தியாவில் மின்னணு வாக்கு எந்திரத்தை ஆய்வு செய்ய யாரும் அனுமதிக்கப்படுவதில்லை: ராகுல் காந்தி குற்றசாட்டு

கேரள மாநிலம் இன்றும் 2-வது நாளாக நில அதிர்வு