தஞ்சாவூரில் சமூக சேவகர் கூட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம்

 

தஞ்சாவூர், டிச.12: தஞ்சாவூரில், தமிழ்நாடு சமூக சேவகர் கூட்டமைப்பின் மாநிலம் தழுவிய கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான் பீட்டர் தலைமை வகித்தார். கூட்டத்தில் தமிழ் பல்கலைக்கழக துணைப் பதிவாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். தஞ்சாவூர் மாவட்ட தலைவர் நெல்சன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில், தலைமை கழக பேச்சாளர் டைசன், மாநில பொருளாளர் தாரணி நரசிம்மன் உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சமூக சேவகர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பொதுமக்கள் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பணம் வாங்காமல் நூறு சதவிகிதம் வாக்களிக்க செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். மாநில மகளிர் அணி பொறுப்பாளர் மேரி நன்றி கூறினார்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை