தஞ்சாவூரில் இன்று 77வது சுதந்திர தினவிழா: தேசியக்கொடியை கலெக்டர் ஏற்றி வைக்கிறார்

தஞ்சாவூர், ஆக. 15: தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 77வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி இன்று காலை தஞ்சாவூரில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறுகிறது. விழாவில் கலெக்டர் தீபக் ஜேக்கப் காலை 9.05 மணியளவில் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். அதைத்தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பதக்கங்களையும், பயனரளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் வழங்குகிறார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். இந்த விழாவில் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

சுதந்திர தினத்தையொட்டி போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி ஆயுதப்படை மைதானத்தில் நேற்றும் நடைபெற்றது. மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி ஒத்திகையும் நடைபெற்றது. இன்று நடைபெறும் சுதந்திர தினவிழாவில் எஸ்பி ஆஷிஷ் ராவத், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கூடுதல் ஆட்சியர் காந்த், ஏடிஎஸ்பி ஜெயச்சந்திரன், டிஎஸ்பிக்கள், காவல் ஆய்வாளர்கள் அரசுத்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்க உள்ளனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்