டெல்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கொலை

டெல்லி: டெல்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவியும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கிட்டி(67) கொலை செய்யப்பட்டுள்ளார். வசந்த் விஹார் இல்லத்தில் கொள்ளை முயற்சியின் போது கிட்டி குமாரமங்கலம் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு 8.30 மணி அளவில் கிட்டி குமாரமங்கலம் வீட்டுக்கு சலவைத்தொழிலாளி வந்துள்ளார்.நேற்று இரவு யாரோ வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டு பணிப்பெண் கதவை திறந்துள்ளார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் உள்ளே நுழைந்து பணிப்பெண்ணை ஒரு அறையில் அடைத்துவிட்டு கிட்டி குமாரமங்கலத்தை தாக்கி இருக்கிறார்கள். முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர். பணிப்பெண் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் அங்கு சென்று விசாரித்தனர்.வீட்டில் துணிகளை துவைத்து தந்து வந்த தொழிலாளி ராஜு(24) தலையணையால் அமுக்கி கிட்டியை கொன்றார். ராஜுவுக்கு உடந்தையாக இருந்த மேலும் 2 பேரை டெல்லி போலீசார் தேடி வருகின்றனர். காங்கிரஸ், பாஜகவில் இருந்த ரங்கராஜன் குமாரமங்கலம் சேலம், திருச்சி தொகுதி எம்.பி.யாக இருந்துள்ளார்….

Related posts

டெல்லி விமான நிலையத்தில் மின் அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டதாலும் விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

மேற்கு வங்கம் ரயில் விபத்து நேரிட்ட பகுதியில் ரயில்வே அமைச்சர் நேரில் ஆய்வு

வெப்ப அலை காரணமாக இண்டிகோ விமானம் புறப்படுவதில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தாமதம்