டூவீலர் திருடியவர் சுற்றி வளைப்பு

குமாரபாளையம்,செப்.2: மாரபாளையம் கிழக்கு சந்தைபேட்டை பகுதியைச் சேர்ந்த நாகராஜன்(27). புரோட்டா மாஸ்டரான இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன் டூவீலரை நிறுத்திவிட்டு தூங்க சென்றார். அதிகாலையில் விழித்துக்கொண்ட நாகராஜன், வெளியில் நிறுத்தி வைத்திருந்த டூ வீலர் பத்திரமாக இருக்கிறதா என எட்டி பார்த்துள்ளார். அப்போது, அங்கு டூவீலர் இல்லாததை கண்டு திடுக்கிட்டார். ஆனால், சற்று தொலைவில் தனது டூவீலரை ஒருவன் தள்ளிக்கொண்டு செல்வதை கண்டு சந்தேகித்து சத்தம் போட்டுள்ளார். உடனே, அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று டூவீலரை தள்ளிக்கொண்டு சென்றவரை மடக்கி பிடித்து குமாரபாளையம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் ஈரோடு பகுதியைச் சேர்ந்த நாகராஜ்(38) என்பது தெரிய வந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர்.

Related posts

காட்பாடியில் மாயமான வடமாநில சிறுமி ஒடிசாவில் மீட்பு தனிப்படை போலீசார் நடவடிக்கை

(வேலூர்) திருமண மண்டபத்தின் உரிமையாளருக்கு அபராதம் பேரூராட்சி நிர்வாகம் அதிரடி பாலாற்றில் குப்பை கொட்டிய

1225 டன் யூரியா மணலியில் இருந்து காட்பாடிக்கு வருகை லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைப்பு வேலூர் உட்பட 4 மாவட்டங்களுக்கு