டூவீலர்கள் மோதல் சிறுவன் பலி; இருவர் படுகாயம்

தேவகோட்டை, மே 25: தேவகோட்டை அருகே டூவீலர்கள் மோதி கொண்ட விபத்தில் சிறுவன் பலியானார். இருவர் படுகாயமடைந்தனர். தேவகோட்டை தாலுகா வெங்களூர் அருகேயுள்ள வண்ணான் வயல் கிராமத்தை சேர்ந்த பாண்டி மகன் தட்சிணாமூர்த்தி (17). தேரளப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது வாலிபர். இருவரும் நேற்று முன்தினம் காலையில் கோயில் திருவிழாவிற்காக டூவீலரில் தேவகோட்டை சிறுவாச்சி சாலையில் சென்றனர். இலக்கிணி வயல் அருகே வந்த போது 15 வயது சிறுவன் டூவீலரில் எதிரே வந்தார்.

எதிர்பாராதவிதமாக 2 டூவீலர்களும் நேருக்கு நேர் மோதியதில் மூவரும் பலத்த காயமடைந்தனர். இதில் தட்சிணாமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த 19 வயது வாலிபர், 15 வயது சிறுவனை மீட்டு மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தகவலறிந்து வந்த ஆறாவயல் போலீசார் தட்சிணாமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்