டூவீலரில் கொண்டு வரப்பட்ட உரிய ஆவணமில்லாத ரூ.3 லட்சம் பறிமுதல்

சிவகங்கை, ஏப். 13: சிவகங்கை அருகே உரிய ஆவணமில்லாததால், ரூ.3 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சிவகங்கை அருகே மதகுபட்டி சாலை ராமலிங்கபுரம் பகுதியில் நிலையான தேர்தல் பறக்கும் படை அலுவலர் சங்கர் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே ஒக்கூரை சேர்ந்த சரவணன் என்பவர் வந்த டூவீலரை சோதனையிட்ட போது அதில் ரூ.3 லட்சம் இருந்தது தெரியவந்தது. பணத்திற்கான உரிய ஆவணம் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை