டூவீலரில் குட்கா கடத்திய இருவர் கைது

 

திருச்செங்கோடு, மார்ச் 13: திருச்செங்கோடு வழியாக குட்கா கடத்தப்படுவதாக புறநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், மோர்பாளையம் பிரிவு பாதையில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தினர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் இரண்டு டூவீலரில் சாக்கு மூட்டைகளுடன் வந்த இருவரை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், காவல் நிலையம் அழைத்துச் சென்று கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். மூட்டைகளை சோதனையிட்டபோது, தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா போன்ற புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அதனை சிறு கடைகளுக்கு சப்ளை செய்ய கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளனர். அவற்றின் மதிப்பு சுமார் ₹2 லட்சம் இருக்கும். விசாரணையில் அவர்கள் சங்ககிரியைச் சேர்ந்த மீரான் நவாஸ்(46), மல்லசமுத்திரம் மீரான் முகைதீன்(40) என்பது தெரியவந்தது. இதையடுத்து, டூவீலருடன் புகையிலை பொருட்கள் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரையும் கைது செய்தனர்.

Related posts

மேட்டமலை கிராமத்தில் தண்ணீர் கசியும் புதிய வாட்டர்டேங்க் சீரமைக்க மக்கள் கோரிக்கை

வடமாடு மஞ்சுவிரட்டில் விவசாயி மண்டை உடைப்பு

வத்திராயிருப்பில் நெல் கொள்முதல் நிலையம் நான்கு இடங்களில் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி