டிப்போவில் ஓய்வெடுத்தவரிடம் செல்போன் திருடிய பஸ் டிரைவர்

சேலம், ஏப்.13: திருநெல்வேலி அரசு போக்குவரத்துக்கழக மண்டலத்தைச் சேர்ந்த முத்து என்பவர் அலுவலக பணிக்காக கடந்த 9ம் தேதி சேலம் மெய்யனூர் அரசு போக்குவரத்துக்கழக டிப்போவிற்கு வந்தார். பின் அங்கிருந்த காத்திருப்போர்அறையில் தூங்கி ஓய்வு எடுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து பார்க்கும் போது அவரது செல்போன் காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த டிப்போ அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து உடனடியாக அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்த போது, அதே டிப்போவில் டிரைவராக வேலை செய்து வரும் சுரேஷ்குமார் (38) என்பவர் செல்போனை திருடியது தெரியவந்தது. இதையடுத்து டிப்போ ேமலாளர் முரளி, பள்ளப்பட்டி போலீசில் புகார் அளித்தார். இவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ₹10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை திருடியது சுரேஷ்குமார் தான் என்பது உறுதியானது. இதையடுத்து அவரிடம் இருந்து செல்போனை மீட்டனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு