ஜாமீனில் வந்து ஓராண்டாக தலைமறைவான வாலிபர் கைது

சேலம், நவ.18: சேலம் அருகே அயோத்தியாப்பட்டணம் பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்ேபாது, ஆந்திராவில் இருந்து டெம்பாவில் கடத்தி வரப்பட்ட 400 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கருமந்துறையை சேர்ந்த வெங்கடேசன்(37) உள்பட 7 பேரை, போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். இதில், கடந்த ஆண்டு ஜாமீனில் வெளியே வந்த வெங்கடேசன், வழக்கு தொடர்பாக சேலம் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கோர்ட் உத்தரவிட்டது. அவரை சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று கருமந்துறை பகுதியில் பதுங்கியிருந்த வெங்கடேசனை கைது செய்தனர். பின்னர், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்