ஜன.10ல் இஎஸ்ஐ குறைதீர்க்கும் முகாம்

நெல்லை, ஜன.6: தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் (இஎஸ்ஐ) திருநெல்வேலி துணை மண்டலம் சார்பில் இஎஸ்ஐ திட்டத்தில் உள்ள பயனீட்டாளர்களுக்கு ஏதாவது குறை இருந்தால் அதை நிவர்த்தி செய்ய மாதந்தோறும் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதத்திற்கான குறைதீர்க்கும் முகாம் வருகிற 10ம் தேதி (புதன்) மாலை 4 மணிக்கு இஎஸ்ஐசி துணை மண்டல அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. முகாமில் இஎஸ்ஐசி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர், துணை மண்டல அலுவலக பொறுப்பு அதிகாரி, மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் மற்றும் இஎஸ்ஐ திட்ட மருந்தக மருத்துவ அதிகாரிகள் கலந்து கொள்வார்கள். எனவே பயனீட்டாளர்கள், குறைகள் ஏதேனும் இருப்பின் முகாமில் கலந்து கொண்டு அதனை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளும் படி குறைதீர்க்கும் அதிகாரியான துணை இயக்குநர் அருண் தெரிவித்துள்ளார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்