ஜனாதிபதி ராம்நாத் எய்ம்சிலிருந்து டிஸ்சார்ஜ்

புதுடெல்லி: இதய அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து ராஷ்டிரபதி பவன் திரும்பிவிட்டதாக ஜனாதிபதி ராம்நாத் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடந்த மாதம் 30ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 3ம் தேதி ஜனாதிபதி மாளிகையின் டிவிட்டர் பதிவில்,‘‘தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டார். அவரது உடல் நிலையில் தொடர்ந்து நல்ல முன்னேற்றம் இருக்கிறது. மருத்துவர்கள் குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்” என குறிப்பிடப்பட்டு இருந்தது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று டிஸ்சாரஜ் செய்யப்பட்டார். அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘‘எனது அறுவை சிகிச்சைக்கு பின் நான் ராஷ்டிரபதி பவன் திரும்பி விட்டேன். எய்ம்ஸ்  மற்றும் ராணுவத்தின் ஆர்ஆர் மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர் களின் கவனிப்பு, உங்களது அனைவரின் வாழ்த்துக்கள், பிரார்த்தனைகளாலும் நான் விரைவில் குணமடைந்துவிட்டேன். ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்” என கூறியுள்ளார்….

Related posts

மேகவெடிப்பு காரணமாக சிக்கிமில் பெருவெள்ளம், நிலச்சரிவு: சுற்றுலாப் பயணிகளை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரம்

மேற்கு வங்கத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி 4 பேர் உயிரிழப்பு: சம்பவ இடத்திற்கு விரைகிறார் முதல்வர் மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து