சௌமிய நாராயண பெருமாள் கோயிலில் திருக்கோட்டியூர் நம்பிகள் திருநட்சத்திர விழா

திருப்புத்தூர், மே 13: சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் பழமையான சௌமிய நாராயண பெருமாள் கோயில் உள்ளது.108 வைணவத் தளங்களில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோயிலில் ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற திருமந்திரத்தை உலகிற்கு உபதேசித்த ராமானுஜரின் குருநாதரான திருக்கோட்டியூர் நம்பிகளின் திருநட்சத்திர விழா நேற்று முன்தினம் இரவில் துவங்கியது. இந்த விழா தொடர்ந்து பத்து நாட்கள் விழா நடைபெறும்.திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் திருக்கோட்டியூர் நம்பிகள் தாயார் அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி புறப்பாடு நடந்தது. நேற்று யோக நரசிம்மர் அலங்காரத்தில் திருக்கோஷ்டியூர் நம்பிகள் அருள் பாலித்தார்.

10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் திருக்கோட்டியூர் நம்பிகள் தினந்தோறும் பெருமாள் திருக்கோலம், ஆண்டாள் திருக்கோலம், மோகினி திருக்கோலம், பரமபதநாதன் திருக்கோலத்திலும், குதிரை வாகனம், சப்பரம் மற்றும் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி திருவீதி புறப்பாடு நடைபெறும்.

Related posts

ஸ்ரீபெரும்புதூரில் கொள்முதல் செய்யப்பட்ட 5 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்: அதிகாரிகள் அலட்சியம்; விவசாயிகள் குற்றச்சாட்டு

தொள்ளாழி ஊராட்சி ஆரம்ப பள்ளியில் புதர்கள் அகற்றம்

சிறப்பு பேரூராட்சிக்காக முதல்வர் வழங்கிய பரிசு தொகையில் சமுதாய நலக்கூடம்