சோனியா காந்தி பிறந்த நாள் விழா

திருச்செங்கோடு: நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், சோனியா காந்தி 77வது பிறந்த நாளையொட்டி திருச்செங்கோடு கைலாசநாதர் கோயிலில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் பொன்னுசாமி, பொதுச்செயலாளர் நந்தகோபால், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகநாதன், பொதுச்செயலாளர் கோவிந்தன், கந்தசாமி, கோபால், கோபாலகிருஷ்ணன், கந்தசாமி, செங்கோட்டையன், சிங்காரம், மாவட்ட துணை தலைவர் காசி விசுவநாதன், நகர நிர்வாகிகள் செல்வம், அர்த்தனாரி, தியாகராஜன், வைத்தீஸ்வரன், பூபதி, நவநீதகிருஷ்ணன், செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். நகர தலைவர் பாலதண்டாயுதம் நன்றி கூறினார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்