சேவல் சண்டை நடத்திய 2பேர் கைது

சேந்தமங்கலம், நவ.28: எருமப்பட்டி ஒன்றியம், கோணாங்கிபட்டி மயான பகுதியில், பணம் வைத்து சேவல் சண்டை நடைபெறுவதாக, எருமப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் எஸ்ஐ பாலமுருகன் தலைமையில், போலீசார் அங்கு சென்றனர். போலீசார் வருவதை பார்த்த அங்கு இருந்தவர்கள், சேவல்களுடன் தப்பி ஓடி விட்டனர். போலீசார் அதில் சிலரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, அதே பகுதியை சேர்ந்த ராமஜெயம் மகன் அரவிந்தன் (21), முருகேசன் (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய பூவரசன், ரஞ்சித், அபிஷேக் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்