சேலம் அரசு கலைக்கல்லூரியில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

சேலம், ஏப். 4: சேலம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் செண்பகலெட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் அரசு கலைக்கல்லூரியில் தற்போது 6,700 மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயின்று வருகின்றனர். நடப்பு 2023-2024ம் கல்வியாண்டில் பட்டம் பெறும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், வேலைவாய்ப்பு முகாம் இன்று (4ம் தேதி) கல்லூரியில் நடக்கிறது. இம்முகாமில் 10 நிறுவனங்கள் கலந்து கொண்டு, வளாக நேர்காணல் நடத்தி மாணவ, மாணவியருக்கு பணிநியமன ஆணை வழங்க உள்ளனர்.முகாமினை கல்லூரி நிர்வாகத்தினர் தலைமையில், கல்லூரியின் மாணவர் வேலைவாய்ப்பு மற்றும் முன்னேற்றக் குழுமம் நடத்துகின்றது. இம்முகாமில் அனைத்துத்துறை முன்னாள் மற்றும் தற்போது இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிகள் தங்களது தன் விவரகுறிப்பு மற்றும் அனைத்து கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த சான்றுகளின் நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு