சேந்தமங்கலம் ஒன்றிய குழு கூட்டம்

சேந்தமங்கலம், ஜூன் 1: சேந்தமங்கலம் ஒன்றிய குழு கூட்டம், தலைவர் மணிமாலா சின்னுசாமி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு துணைத் தலைவர் கீதா வெங்கடேஸ்வரன், பிடிஓ.,க்கள் ரவிச்சந்திரன், சுகிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் சங்கர் தீர்மானங்களை படித்தார். கூட்டத்தில் வட்டார ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னை ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து, அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி பகுதிகளில் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்க்க, தூய்மை பாரத மற்றும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் நவீன சுகாதார வளாகம் அமைப்பது. ஊராட்சி பகுதிகளில் ₹50 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை, குடிநீர், கழிவுநீர் வாய்க்கால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பெரியசாமி, ஸ்ரீபாலன், சரசு திராவிட மணி, கோகிலா, சுபாஷினி கார்த்திக், சண்முகம், வட்டார பொறியாளர்கள் நஸ்ரின், கலைச்செல்வி, பணி மேற்பார்வையாளர்கள் சரவணகுமார், குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்