செட்டியூரணியில் பகுதி நேர ரேஷன்கடை

தூத்துக்குடி, பிப். 25: தூத்துக்குடி செட்டியூரணியில் புதிதாக அமைக்கப்பட்ட பகுதிநேர ரேஷன்கடையை சண்முகையா எம்எல்ஏ திறந்துவைத்தார். தூத்துக்குடி மாவட்டம், மேல தட்டப்பாறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் உமரிகோட்டை நியாய விலை கடைக்கு உட்பட்ட செட்டியூரணி பகுதிக்கு, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி உள்ளூர் மேம்பாட்டு நிதியில் இருந்து புதிதாக பகுதி நேர ரேஷன் கடை அமைக்கப்பட்டது. இதையடுத்து நடந்த திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற ஓட்டப்பிடாரம் தொகுதி எம்எல்ஏ சண்முகையா, பகுதி நேர ரேஷன் கடையை திறந்துவைத்தார்.

உமரிக்கோட்டை பஞ். தலைவர் முத்துலட்சுமி குத்து விளக்கேற்றினார். இதைத்தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன்பொருட்கள் வழங்கப்பட்டன. விழாவில் தூத்துக்குடி கூட்டுறவு சார்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) அந்தோனி பட்டுராஜ். தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியரும், கூட்டுறவு சார் பதிவாளருமான சாம் டேனியல் ராஜ், வேளாண் உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர் குமார் மற்றும் சங்கப் பணியாளர்கள், விற்பனையாளர்கள், கூட்டுறவாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்