இந்திய ஒற்றுமை இயக்கத்தின் தெருமுனை பிரசாரம் துவக்கம்

 

கோவை, பிப்.25: வாக்காளர் விழிப்புணர்வு, மத நல்லிணக்கம் மற்றும் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி கோவை மாநகர் மற்றும் புறநகரில் இந்திய ஒற்றுமை இயக்கம் தெருமுனை பிரசாரத்தை கடந்த 23ம் தேதி துவங்கியது. அன்று மாலை 7 மணிக்கு கோவை காந்திபுரம் பெரியார் சிலை முன் தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தெருமுனை பரப்புரையை துவக்கி வைத்தார். இந்திய ஒற்றுமை இயக்கத்தின் கோவை தொகுதி ஒருங்கிணைப்பாளர் மா.நேருதாசு தலைமை தாங்கினார்.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சிவசாமி, மதிமுக மாவட்ட செயலாளர் கணபதி செல்வராஜ், காங்கிரஸ் வழக்கறிஞர் அணி பொறுப்பாளர் செந்தில், ஆதித்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் கோவை ரவிக்குமார், திராவிட தமிழர் கட்சி பொறியாளர் செந்தில், மக்கள் அதிகாரம் மூர்த்தி, புரட்சிகர இளைஞர் முன்னணி மலரவன், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்ட செயலாளர் அசரப் அலி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஆறுச்சாமி, செயல் ஆ. நந்தகுமார், இந்திய ஒற்றுமை இயக்கத்தின் கோவை வடக்கு தொகுதி பொறுப்பாளர் சா கதிரவன், ஒருங்கினைப்பாளர் டென்னிஸ் கோவில் பிள்ளை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்