செட்டிநாடு சிக்கன் கிரேவி

செய்முறை: வாணலியில் பட்டை, சோம்பு, கிராம்பு, ஏலக்காய், தனியா, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து மிதமான சூட்டில் நன்றாக வறுத்து, அத்துடன், தேங்காய் துருவல், முந்திரிப் பருப்பு சேர்த்து வறுத்து அரைத்துக் கொள்ளவும். வாணலியில், எண்ணெய்விட்டு பிரியாணி இலை, சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து நன்றாக வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், அரைத்து வைத்த மசாலா அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறியப் பிறகு, தக்காளி துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர், இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதித்து வரும்போது, சிக்கன் துண்டுகளை சேர்த்து சுமார் 15 நிமிடங்களுக்கு வேகவிடவும். தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளவும். இறுதியாக, கொத்தமல்லித் தூவி இறக்கவும்….

Related posts

சைனீஸ் காளான் சூப்

சாக்லெட் கப்ஸ்

துவரம் பருப்பு இட்லி உப்புமா