சூதாடிய 3 பேர் கைது

 

காங்கயம், மே 9: காங்கயம் அடுத்த பாலசமுத்திரம் புதூர்கிராமத்தில் பணம் வைத்து சீட்டாடுவதாக காங்கயம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வயக்காட்டுபுதூரில் சூதாடிய பெருந்துறை சென்னிவலசுசை சேர்ந்த வெங்கடேஷ் (51), பெருந்துறை பூச்சம்பள்ளியை சேர்ந்த மணிகண்டன் (38) காங்கயம் ரெட்டிபாளையத்தை சேர்ந்த சிவக்குமார் (46) ஆகிய 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து, மடக்கி பிடித்து கைது செய்து, அவர்களிடம் இருந்து பணம் ரூ.24 ஆயிரம் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்