சீட் மறுப்பால் கேரள மகளிர் காங். தலைவி ராஜினாமா

திருவனந்தபுரம்: கேரள மகளிர் காங்கிரஸ் தலைவியாக இருப்பவர் லதிகா சுபாஷ். இவர் கோட்டயம் மாவட்டம் ஏற்றுமானூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். இந்நிலையில் நேற்று வெளியிடப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் லதிகா சுபாஷ்க்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் கடும் ஏமாற்றம் அடைந்த அவர் நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள காங். தலைமை அலுவலகத்தில் மொட்டை அடித்து போராட்டம் நடத்தினார். மகளிர் காங்கிரஸ் தலைவி பொறுப்பையும் ராஜினாமா செய்தார். ‘‘என்னை விட வயது குறைந்த அனுபவம் இல்லாத பலருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. கட்சிக்காக உழைத்த என்னை போன்ற பல பெண்களுக்கு சீட் கொடுக்கப்படவில்லை’’ என அவர் கூறினார்….

Related posts

ரூ7 கோடி வாங்கி ஏமாற்றியதாக புகார்; மஞ்சும்மல் பாய்ஸ் படத் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு மோசடி: கேரள உயர்நீதிமன்றத்தில் போலீஸ் அறிக்கை தாக்கல்

திருக்குறள், தமிழ் பண்பாடு பற்றியெல்லாம் பேசிவிட்டு தமிழர் மீது பிரதமர் வெறுப்பை கக்குவது ஏன்?.. ஒடிசா அரசியலில் இன தாக்குதல் நடத்தும் பாஜ

பயணிகள் ரயிலில் திடீர் தீ