சிவகங்கையில் மறியலில் ஈடுபட்ட 83 பேர் கைது

சிவகங்கை, டிச.28: சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இப்போராட்டம் நடந்தது. சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் கோஷமிட்டபடி மறியலில் ஈடுபட முயன்ற அரசு ஊழியர், ஆசிரியர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். போராட்டத்திற்கு மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரகாஷ், காளிமுத்து தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் முன்னிலை வகித்தார். பல்வேறு சங்க நிர்வாகிகள் பிச்சை, மிக்கேலம்மாள், வாசுகி, வேல்முருகன், அப்துல்லா, சுரேஷ்குமார், சங்கர சுப்பிரமணியன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 83பேர் கைது செய்யப்பட்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்