சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு காட்பாடி அருகே

வேலூர், டிச.1: காட்பாடி அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காட்பாடி அடுத்த லத்தேரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவருக்கும் காட்பாடி அருகே சிங்காரெட்டியூரைச் சேர்ந்த அஜீத்(25) என்பவருக்கும், கடந்த ஜனவரி மாதம் 15ம்தேதி திருமணம் நடந்தது. இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர். இந்நிலையில் 13 வயதுள்ள சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்ததாக கே.வி.குப்பம் சமூக நல அலுவலர் சித்ராவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் கிடைத்தது. அதன்பேரில் சித்ரா நேரில் சென்று விசாரணை நடத்தினார். அதில் சிறுமிக்கு திருமணம் நடந்தது உறுதியானது. இதுகுறித்து சித்ரா காட்பாடி அனைத்து மகளிர் ேபாலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சிறுமியை திருமணம் செய்த அஜீத் மீது போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

திருத்தங்கல்லில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை மூட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வில்லிபுத்தூர் அருகே இலவச தென்னை கன்றுகள் வழங்கல்

குறைவான செலவில் குச்சி முருங்கை சாகுபடி செய்து நிரந்தர வருமானம் பெறலாம்: வேளாண்துறை ஆலோசனை