சிறுமியை திருமணம் செய்த டிரைவர் போக்சோவில் கைது

 

திருப்பூர், மார்ச் 25: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்தவர் தாமோதரன் (25). இவர் திருப்பூர் ஊத்துக்குளி ரோடு பாளையங்காடு பகுதியில் தங்கி பள்ளி வாகன ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இவருக்கு அதே பகுதியில் உள்ள 14 வயது சிறுமியுடன் நட்பு ஏற்பட்டு பழகி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தாமோதரன், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றதாக தெரிகிறது.இது குறித்து சிறுமியின் தாய், வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து உதவி கமிஷனர் அனில்குமார் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் தலைமை காவலர் மகாராஜா ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று தனிப்படை போலீசார், இடுவாய் பகுதியில் பதுங்கி இருந்த தாமோதரனை பிடித்து விசாரித்ததில் சிறுமியை திருமணம் செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வடக்கு அனைத்து மகளிர் போலீசார் தாமோதரனை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.

Related posts

மேட்டமலை கிராமத்தில் தண்ணீர் கசியும் புதிய வாட்டர்டேங்க் சீரமைக்க மக்கள் கோரிக்கை

வடமாடு மஞ்சுவிரட்டில் விவசாயி மண்டை உடைப்பு

வத்திராயிருப்பில் நெல் கொள்முதல் நிலையம் நான்கு இடங்களில் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி