சிறுகாம்பூரில் மது பதுக்கி விற்றவர் கைது

 

திருவெறும்பூர்: திருச்சி அருகே மதுபாட்டில்கள் பதுக்கி விற்றவர் கைது செய்யப்பட்டார். திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெசித்ராவிற்கு, திருச்சி அருகே உள்ள சிறுகாம்பூர் பகுதியில் கள்ள சந்தையில் மதுபானம் விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஜெயசித்ரா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது, சித்தாம்பூரை சேர்ந்த சுப்ரமணி (50), முசிறியை சேர்ந்த பெரியசாமி என்பவரும் மதுபானம் விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுப்பிரமணியை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய பெரியசாமி தேடி வருகின்றனர். இவர்களிடம் இருந்து 395 அரசு மதுபான பாட்டுக்களை பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

பக்ரீத் சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர் திரளாக பங்கேற்பு

காங்கயத்தில் அரசு பேருந்து-கார் மோதல்

கேரளாவிலிருந்து பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு அன்னாசி பழம் வரத்து அதிகரிப்பு