சித்ரா பவுர்ணமியையொட்டி கைலாசபுரம் தைப்பூச மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு இன்று தீர்த்தவாரி

நெல்லை, மே 5: நெல்லையப்பர் கோயில் சுவாமி, அம்பாள் சித்ரா பவுர்ணமி தீர்த்தவாரி வைபவம் சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டபம் தாமிரபரணி தீர்த்த கட்டத்தில் இன்று நண்பகல் நடக்கிறது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நெல்லையப்பர் கோயிலில் இருந்து சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவர், அஸ்திர தேவி மற்றும் பரிவார மூர்த்திகளுடன் இன்று (5ம் தேதி) நண்பகல் 12.30 மணிக்கு நெல்லையப்பர் கோயிலில் இருந்து புறப்பட்டு எஸ்.என் ஹைரோடு வழியாக கைலாசபுரம் தைப்பூச மண்டத்தில் தாமிரபரணி நதிக்கரையை சென்றடைந்ததும் தீர்த்தவாரி வைபவம் நடக்கிறது. இதையொட்டி சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. இதைத்தொடர்ந்து சுவாமி- அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகள் வீதியுலாவாக டவுன் நெல்லையப்பர் கோயிலை மீண்டும் வந்தடையும் வைபவம் நடக்கிறது.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு