சிட்டு குருவிகளுக்கு உணவு அளிக்க மாணவிகள் உறுதி

குமாரபாளையம், மார்ச் 22: குமாரபாளையம் இல்லம் தேடி கல்வித்திட்ட மையத்தில், சிட்டுகுருவிகள் தினம் கொண்டாடப்பட்டது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விடியல் பிரகாஷ், நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி சிட்டுகுருவிகளின் வகைகள், தன்மை, அதன் குணநலன்கள், விவசாயத்திற்கு அவை ஆற்றும் சேவைகள் குறித்து விளக்கினார். கோடைகாலம் தொடங்கி விட்டதால், சிட்டுகுருவிகளை காக்க வீடு தோறும் அதற்கான உணவு தானியங்கள், தண்ணீர் ஆகியவற்றை வைக்க வேண்டும் என வலியுறுத்தினார். சிட்டு குருவிகளை பாதுகாப்பதாக மையத்தில் பயிலும் பள்ளி குழந்தைகள் உறுதிமொழியேற்றனர். பின்னர், பல்வேறு இடங்களில் வீடுகளின் முன்பு சிட்டு குருவிகளுக்கு தானியம் தண்ணீர் வைக்கப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற பேச்சுபோட்டி, ஓவிய போட்டிகளில் பங்கேற்ற குழந்தைகளுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள் காயத்ரி மற்றும் தீனா, ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு

ராஜபாளையத்தில் பலத்த காற்று மரம் சாய்ந்து வாகனங்கள் சேதம்

சட்ட விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்