சாலையோர வியாபாரிகளிடம் வரி வசூல்

அறந்தாங்கி,ஏப்.2: அறந்தாங்கி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலையோரத்தில் உள்ள வியாபாரிகளிடம் நகராட்சி நிர்வாகத்திற்கு தெரியாமல் வசூல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். அறந்தாங்கி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலை ஓரத்தில் சிறு குறு வியாபாரம் செய்யும் வியாபாரிகளிடம் நேற்று நகராட்சி அனுமதி இல்லாமல் சிலர் வசூல் பணம் கேட்டு உள்ளனர். வியாபாரி அதற்கு நான் ஏற்கனவே பணம் செலுத்தி விட்டேன் என கூறி உள்ளார். அதற்கு வசூல் செய்ய வந்தவர்கள் வியாபாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். சாலை ஒரு வியாபாரிகளிடம் நகராட்சி நிர்வாகம் எதற்கான வசூல் என எழுதி கொடுத்து விட்டு செல்ல வேண்டும். சாலையோர வியாபாரிகளிடம் அடிக்கடி வசூல் செய்ய வந்தால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என சாலையோர வியாபாரிகள் மற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறினர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்